தமிழக பட்ஜெட்.. அனல் பறக்கும் களம் - பாராட்டும் காட்டமான விமர்சனமும்

x

தமிழ்நாடு பட்ஜெட், வருவாயை பெருக்க உதவாத பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வறுமையை போக்கக்கூடிய, வேலை வாய்ப்பை அதிகரிக்கக்கூடிய, பொருளாதார நிலையை உயர்த்தக்கூடிய பட்ஜெட்டாக அமையவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால், மத்திய அரசை குறை கூறும் பட்ஜெட்டாகவே இருப்பதாகவும் விமர்சித்துள்ளார். தமிழக விவசாயிகளின், தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட்டாக அமைந்திருப்பதாக தெரிவித்துள்ள ஜி.கே.வாசன், மக்களுக்கான ஆட்சியாக செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக பட்ஜெட் கடைகோடி தமிழனையும் கைத்தூக்கிவிடும் சீரிய முயற்சி என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள‌ அறிக்கையில், தமிழக அரசின் வரவு செலவு அறிக்கை, திராவிட மாடல் அரசின் சீர்மிகு நிதி நிர்வாகத்தின் வெளிப்பாடு என்று கூறியுள்ளார். ஏழு இலக்குகளை நிறைவேற்ற நிதிநிலை அறிக்கையில் திட்டங்களை வழங்கியுள்ள நிதி அமைச்சரையும், அவரை வழிநடத்திய முதல்வரையும் பாராட்டியுள்ளார். மேலும், "ஸ்டாலின் A man with a Plan" என்பதனை இந்த பட்ஜெட் நிரூபித்து உள்ளதாகவும் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்