தி.நகரில் பழைய நகை மாற்ற வந்த பெண்ணுக்கு பேரதிர்ச்சி.. பிரபல ஜூவல்லரியில் பரபரப்பு

x

தி.நகரில் பழைய நகை மாற்ற வந்த பெண்ணுக்கு பேரதிர்ச்சி.. பிரபல ஜூவல்லரியில் பரபரப்பு.. பெண்களே இதுல ஏமாந்திடாதீங்க

திருட்டு வழக்குகளில் சிக்கி, திருந்தி வாழ்கிறேன் என சொல்லிய பெண், மீண்டும் கைவரிசை காட்டி சிக்கிய சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு போலீசிடம் பிடிபட்டால், வடிவேல் பட பாணியில் ஆடைகளை அவிழ்த்து விட்டு போலீசாரையே திக்குமுக்காட செய்வதை தனது டிரேட் மார்க்காக கொண்டவர் தான் பாண்டிச்சேரியை சேர்ந்த பெண்ணரசி எனும் தென்னரசி...

54 வயதான இவர், சென்னை தி நகரில் யாரும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத வகையில் மாஸ்க் அணிந்து கொண்டு சுற்றித்திரிந்து வந்துள்ளார்..

இந்நிலையில் தான் சென்னை மதுரவாயல் அடுத்த காரம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயந்தி, தனது 40 கிராம் எடை கொண்ட பழைய நகைகளை மாற்றி புதிய நகை வாங்க, சென்னை தி நகரில் உள்ள பிரபல நகைக்கடைக்கு சென்றுள்ளார்...

ஆனால், நகை பிடிக்காததால், நகை கடையை வெளியேறி விட்டு மற்றொரு பிரபல ஜவுளிக்கடையில் ஆடைகள் வாங்க சென்றுள்ளார்...

இதன் பின்னர், மீண்டும் மற்றொரு பிரபல நகைக்கடைக்குள் நுழைந்துள்ளார்...

அங்கு நகை வாங்க பழைய நகையை பைக்குள் இருக்கு எடுக்கும் போது ஜெயந்திக்கு காத்திருந்தது அதிர்ச்சி...

கைப்பையில் வைத்திருந்த நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ந்த அவர், இது தொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

உடனடியாக தி நகரில் உள்ள பிரபல நகைக்கடை மற்றும் ஜவுளிக்கடையின் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, ஜவுளிக்கடையில் துணி வாங்க சென்ற போது, பெண் ஒருவர் நைசாக நகைகளை திருடியது தெரியவந்தது...

அது வேறு யாரும் இல்லை.... தி நகரில் மாஸ்க்குடன் உலாவிக் கொண்டிருந்த பாண்டிச்சேரியை சேர்ந்த பலே பெண் திருடர் தென்னரசி...

உடனடியாக அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்ததோடு நகை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

இந்நிலையில், திருந்துவதற்கு வாய்ப்பு கொடுத்தும் அதனையும் மீறி திருட்டு சம்பவங்களில் தென்னரசி ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது...

ஆம்..தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால், அவரை திருத்த வேண்டும் என்பதற்காக, பாண்டிச்சேரி கடற்கரை பகுதிகளில் டீக்கடை ஒன்று நடத்த அனுமதியளித்த போலீசார், இனி திருட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் இரவு நேரங்களில் டீக்கடை பிசினசில் கல்லா கட்டி விட்டு..பகல் நேரங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதை தொடர்ந்திருக்கிறார் தென்னரசி...

இச்சூழலில், மீண்டும் திருட்டு வழக்கில் சிக்கிய தென்னரசியிடம், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்