ஆள் செட் செய்து மகனை கொலை செய்து நாடகமாடிய தாய்.. காட்டி தந்த ரத்தம்.. காரணம் கேட்டு ஆடிப்போன போலீஸ்

x

ஆள் செட் செய்து மகனை கொலை செய்து நாடகமாடிய தாய்.. காட்டி தந்த ரத்தம்.. காரணம் கேட்டு ஆடிப்போன போலீஸ்

உடுமலை அருகே ஆலாமரத்தூரில் சொந்த மகனை கொலை செய்த வழக்கில், தாய், சகோதரி உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஆலாமரத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் தனது தாயார் பொன்னுதாயுடன் வசித்து வந்த நிலையில், இரவு தோட்டத்தில் மது அருந்திக் கொண்டிருந்த நிலையில் மாயமானார். இது குறித்து, காணாமல்போன சிவகுமாரின் சகோதரி திலகவதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்தில் ஆய்வு செய்த போலீசார், கிணற்றின் அருகே ரத்தக்கறை படிந்திருப்பதை கண்டறிந்தனர். பின்னர் கிணற்றின் உள்ளே இருந்து, சிவகுமாரை சடலமாக மீட்டனர். இதனிடையே புகாரளித்த தாய் மற்றும் அக்காவின் மேல் சந்தேகம் ஏற்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சிவக்குமார் தினமும் மது அருந்தி தாயாரை தகாத வார்த்தைகளில் பேசிவந்ததாகவும், அவரது கொடுமை தாங்க முடியாத நிலையில், தெரிந்தவர்கள் இருவரை வரவழைத்து, சிவக்குமாரை கொலை செய்து கிணற்றில் வீசியதை சிவகுமாரின் தயாரும், சகோதரியும் ஒப்புக் கொண்டனர். இதனை தொடர்ந்து தாய் பொன்னுதாயி, சகோதரி திலகவதி, உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்