`குண்டக்க மண்டக்க' பதில் கூறிய நபர்... கும்பலாக கும்மிய மக்கள் | Thirupathur

x

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே, குழந்தைகளை கடத்த வந்ததாக நினைத்து, சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த நபரை பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. வீராகவுண்டனூர் பகுதியில் அங்கும் இங்குமாக சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த நபரை, அங்கிருந்தவர்கள் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், சந்தேகம் அடைந்த பொதுமக்கள் குழந்தையை கடத்த வந்ததாக நினைத்து, அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்தனர். தகவலின் பேரில் வந்த போலீசார், அந்த நபரை மீட்டு காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்