ஊரே வாய் பிளக்க.. பண மாலையுடன் வண்டி வண்டியாய் சீரை இறக்கிய மாமன்கள் - 'காது குத்துக்கே இப்படியா?'

x

ஊரே வாய் பிளக்க.. பண மாலையுடன் வண்டி வண்டியாய் சீரை இறக்கிய மாமன்கள் - 'காது குத்துக்கே இப்படியா?'


தேனி மாவட்டம் வருசநாட்டில் நடைபெற்ற காதணி விழாவுக்கு 3 டிராக்டர்கள் உள்பட 10 வாகனங்களில் சீர்வரிசை கொண்டு வந்து தாய்மாமன்கள் அசத்தினர். வருசநாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாகராஜன் என்பவரது மகள் காதணி விழாவுக்கு கரகாட்டம், தேவராட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களுடன் தாய்மாமன் ஊர்வலம் நடைபெற்றது. 10 வாகனங்களில் 500 தாம்பூலங்கள் மற்றும் குதிரை சாரட் வண்டியில் அழைத்து வரப்பட்ட குழந்தைக்கு ஒரு லட்ச ரூபாய் பண மாலையை தாய்மாமன்கள் அணிவித்து அசத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்