கோயிலில் இருந்து ஐம்பொன் சிலைகள் திருட்டு - போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

செங்கம் அருகே குகை கோயிலில் இருந்து ஐம்பொன் சிலைகளை திருடிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் மலமஞ்சனூர் கிராம காட்டுப்பகுதியில் உள்ள குகை கோயிலில் இருந்து, வீரபத்திரன் சாமி சிலை உள்பட ஏழு சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த போலீசாருக்கு, நுக்காம்பாடி பகுதியில் திருடு போன சிலைகள் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து புதைக்கப்பட்டு இருந்த ஐந்து சிலைகளை கைப்பற்றிய போலீசாருக்கு, அவையனைத்தும் ஐம்பொன் சிலைகள் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்ட மற்ற நபர்கள் கும்பகோணம் மற்றும் காட்டுமன்னார் கோயில் பகுதிகளில் பதுங்கி இருப்பதும், அவர்களிடம் மீதமுள்ள சிலைகள் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து கொள்ளையில் ஈடுபட்டு பதுங்கி உள்ள நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்