பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்த நபர்...போராட்டத்தில் குதித்த மாதர் சங்கத்தினர்

x

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்து உள்ள மேட்டூர் பகுதியில் சமூக வலைதளத்தில் பெண்களின் புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு வெளியானதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் முருகேசன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் முருகேசன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதாக இல்லை என கூறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினை பெண்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் முருகேசன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரிக்கை முன் வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்