கண்டும் நிற்காமல் சென்ற அரசு பேருந்து -விரட்டி சென்று ஏறும் மாணவர்கள் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி

x

நெல்லை அருகே நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை பள்ளி மாணவர்கள் விரட்டி சென்று ஏறும் சிசிடிவி காட்சி வெளியாகி காண்போரை பதற வைத்துள்ளது. ஸ்ரீபுரத்தில் பள்ளி முடிந்து மாணவர்கள் காத்திருந்த நிலையில், அவ்வழியாக முக்கூடல் நோக்கி சென்ற அரசுப் பேருந்து நிற்காமல் சென்றுள்ளது. இதனால், பள்ளி மாணவர்கள் பலரும் முண்டியடித்துக் கொண்டு ஓடி பேருந்தில் தொங்கியபடி சென்றனர். வாகனங்கள் அதிகம் வரக்கூடிய சாலையில் பேருந்திற்காக மாணவர்கள் ஓடிய நிலை அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாணவர்களின் கூட்டத்தை கண்டு அடிக்கடி பேருந்துகள் நிற்காமல் செல்வதாக கூறப்படும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்