அதிர்ச்சியில் உறைந்த விவசாயி.. இரவில் இறங்கிய கூட்டத்தால்..மொத்த தோப்பும் காலி

x

#thanthitv #elephants #farmers #theni

அதிர்ச்சியில் உறைந்த விவசாயி.. இரவில் இறங்கிய கூட்டத்தால்..மொத்த தோப்பும் காலி

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் காட்டு யானைக் கூட்டம் தென்னை மரத் தோப்பிற்குள் புகுந்து சேதப்படுத்தியதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்...

நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வந்த யானை கூட்டம், தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான தென்னை தோப்பிற்குள் புகுந்து அங்கிருந்த 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது. அதேபோல ஒரு பெரிய தென்னை மரத்தை மோதி வேரோடு சாய்த்தது. காலை வழக்கம் போல தோட்டத்திற்கு சென்ற தங்கராஜ் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வனத்துறையினர் தோட்டத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் உரிய நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்