தாம்பரத்தை சுற்றி நோட்டமிடும் `டிசம்பர்' அரக்கன்கள் -இந்த வீடியோவ பாருங்க விபரீதம் புரியும்..உஷார்..

x

தாம்பரத்தை சுற்றி நோட்டமிடும் `டிசம்பர்' அரக்கன்கள் -இந்த வீடியோவ பாருங்க விபரீதம் புரியும்..உஷார்..

சென்னை தாம்பரம் அருகே நள்ளிரவில் பயங்கர ஆயுதத்துடன் கொள்ளையர்கள் சுற்றித் திரியும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மழைக்காலம் என்றாலே, தாம்பரம் அருகேயுள்ள முடிச்சூர், வரதராஜபுரம், அமுதம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது.

இதன் காரணமாக, அப்பகுதி மக்கள் மழை வருவதற்கு முன்பே, வீடுகளை காலி செய்துவிட்டு, உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக, வீடுகளை பூட்டிவிட்டு சென்றிருப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன், ஆணி பிடுங்கும் கவுபாருடன், இரண்டு இளைஞர்கள் முடிச்சூர் பகுதிகளில் நள்ளிரவில் சுற்றித் திரிந்த காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெரு முழுதும் சல்லடை போட்டு திரிந்த அந்த நபர்களால் அதிர்ச்சி அடைந்திருக்கும் பொதுமக்கள், குற்றச் சம்பவம் அரங்கேறும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்