"மனைவிக்கு சர்ப்ரைஸ் Gift"கணவன் எடுத்த விபரீத முடிவு.. நீதிமன்றத்தில் அதிரடி தீர்ப்பு..
கடந்த 2018-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றிய அஜித்குமார், தனது மனைவியின் பிறந்தநாளுக்கு தங்க மோதிரம் பரிசளிக்க திட்டமிட்டுள்ளார். அதற்காக உடன் பணிபுரிந்த சக ஊழியர் வேல்விழியிடம் பணமோ, அடமானம் வைக்க நகையோ தருமாறு கேட்டுள்ளார். அதற்கு வேல்விழி மறுத்ததால் ஆத்திரமடைந்த அஜித், துப்பட்டாவால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து நகைகளை பறித்துள்ளார். வேல்விழியின் தந்தை அளித்த புகாரில் விசாரணை மேற்கொண்ட போலீசாரிடம், கொலை செய்ததை அஜித் ஒப்புக்கொண்டார். இதுதொடர்பான வழக்கு விசாரணை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், அஜித்திற்கு ஆயுள் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Next Story
