நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் அசிங்கம் செய்த சிறப்பு SI - கும்மியெடுத்த கணவர்

x

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரர் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் காவல் உதவி ஆய்வாளர் தவறாக நடக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டியை சேர்ந்தவர் சப்பாணி. 55 வயதான இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ள நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவு ஒரு மணியளவில் அத்துமீறி நுழைந்த சப்பாணி, அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனே, அப்பெண்ணின் கணவர் சப்பாணியை கண்டித்து தாக்கிய நிலையில், தனது போலீஸ் அதிகாரத்தை பயன்படுத்தி அவரை சப்பாணி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் என 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து, தலைமறைவான சப்பாணியை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்