"ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்" - மக்கள் கோரிக்கை

x

"ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்" - மக்கள் கோரிக்கை


ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என கிராம மக்களும், கூடாது என சர்வதேச உரிமைகள் கழகத்தினரும் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி, மீளவிட்டான், மடத்துர், வீரபாண்டியபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அப்போது, தவறான தகவலை கூறி ஆலை மூடப்பட்டுள்ளதாகவும், 18 ஆண்டுகளாக தொழிற்சாலையில் பணியாற்றியும் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் கிராம மக்கள் தெரிவித்தனர். இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றக்கோரி சர்வதேச உரிமைகள் கழகத்தினர், மனு அளித்தனர். போலியான ஆதரவாளர்கள் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மனுக்கள் கொடுக்கப்பட்டு வருவதாகவும், தூத்துக்குடி மக்களிடையே ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என பிரிவினையை ஏற்படுத்தி வன்முறையை தூண்டுவதாகவும் குற்றஞ்சாட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்