திருமணம் செய்து கொள்வதாக மோசடி... பணம், நகையுடன் தப்பிய பலே கில்லாடி - காத்திருந்த ட்விஸ்ட்

x

திருமணம் செய்து கொள்வதாக மோசடி... பணம், நகையுடன் தப்பிய பலே `கில்லாடி' - தேடி சென்ற இடத்தில் காத்திருந்த ட்விஸ்ட்

#kovai #thanthitv

சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர், மனைவியிடம் விவாகரத்து பெற்று தனியே வசித்து வந்தார். இந்நிலையில் 2 வது திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில், மேட்ரிமோனி பார்த்து, திருச்செங்கோட்டை சேர்ந்த கணவனை இழந்த பெண்ணிடம், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசி வந்த நிலையில், தமக்கு திருமண தடை தோஷம் இருப்பதால் பரிகாரம் செய்ய உதவுமாறு கோரியுள்ளார். இதனால் அந்த பெண் தமது 167 சவரன் நகைகளை கொடுத்துள்ளார்.

நகை, பணத்தை வாங்கிய ரவிச்சந்திரன் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து தலைமறைவானார்.இதனிடையே ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் பேரூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்த போலீசார், கரூரில் பதுங்கியிருந்த ரவிச்சந்திரனை கைது செய்தனர். அப்போது பெண் மருத்துவர் ஒருவரும் உடன் இருந்துள்ளார். போலீசார் விசாரணையில், ரவிச்சந்திரன் திருச்செங்கோட்டை சேர்ந்த பெண்ணிடமும், பெண் மருத்துவரிடமும் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ரவிச்சந்திரனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்