போலி நகைக்கு ரூ.2.5 லட்சம் கேட்ட கவுன்சிலர் கைது..

x

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே அரசு வங்கியில் போலி நகையை அடகு வைத்து இரண்டரை லட்ச ரூபாய் கடன் வாங்க முயற்சி செய்த திமுக கவுன்சிலரையும், ஊராட்சி மன்ற தலைவரின் கணவரையும் போலீசார் கைது செய்தனர்.

அச்சிறுப்பாக்கத்தை அடுத்த அனந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த திமுக கவுன்சிலர் பாலசுப்பிரமணியம், வடமணிப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் வடிவேலுவிடம் நெல் விற்பனை செய்துள்ளார். அவருக்கு வடிவேலு பணம் கொடுக்காமல், தன்னிடம் இருந்த 9 சவரன் நகையை கொடுத்து, அதை வங்கியில் அடகு வைத்து பணம் எடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். நகையை வாங்கிக் கொண்டு சென்ற பாலசுப்பிரமணியம், அச்சிறுபாக்கத்தில் உள்ள இந்தியன் வங்கியில் இரண்டரை லட்ச ரூபாய் கடன் கேட்டுள்ளார். நகையை பரிசோதித்த வங்கி ஊழியர், அது போலி நகை என்று கூறியதை அடுத்து, வங்கி மேலாளர் அளித்த புகாரின்பேரில், பாலசுப்பிரமணியம், வடிவேலு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்