அண்ணா அறிவாலயத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்திய ஆர்.எஸ்.பாரதி

x

நாட்டின் 77வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேசியக்கொடி ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த திமுக தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்,

இந்நிகழ்ச்சியில் திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்