தமிழக அரசியல் களமே பற்றி எரிய கூல் மோடுக்கு மாறிய ஆளுநர் RN ரவி
தமிழக அரசியல் களமே பற்றி எரிய கூல் மோடுக்கு மாறிய ஆளுநர் RN ரவி
நாடுகளுக்குகிடையே மோதல்கள் நிலவும்போது, அதற்கு தீர்வு ஏற்படுத்துவதற்கு இந்தியாவை உலகம் உற்று நோக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழக விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, உலக அளவில் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் 11வது இடத்திலிருந்த இந்தியா, தற்போது 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக தெரிவித்துள்ளார். சமத்துவ உலகை நீடிக்கச் செய்ய வேண்டும் என்பதே இந்தியாவின் பார்வை என்று தெரிவித்துள்ள அவர், நாடுகளுக்கு இடையே மோதல் நிலவும்போது, அதற்கு தீர்வு ஏற்படுத்துவதற்கு இந்தியாவை உலகம் உற்று நோக்குவதாகவும் தெரிவித்துள்ளார். நம் நாட்டில் கடந்த காலத்தில் 20 மில்லியனாக இருந்த வரி செலுத்துவோரின் எண்ணிக்கை, தற்போது நூறு மில்லியனாக உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.