ஹாஸ்டல் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை... சிக்கிய தனியார் பள்ளி பாதுகாவலர்கள்

x

ஹாஸ்டல் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை... சிக்கிய தனியார் பள்ளி பாதுகாவலர்கள்

திருச்சியில் இயங்கி வரும் பிரபல தனியார் மடத்தின் குருகுல பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இதனை கருப்பையா என்பவர் நிர்வகித்து வருகிறார். இதனிடையே, மடத்தின் பாதுகாவலர்கள் 4 பேர், மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், குருகுல பள்ளியில் சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதியானதை அடுத்து, மடத்தின் பாதுகாவலர்களான தனசேகர், பார்த்திபன், சிவகிரி, ஏசுராஜ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்