34 மாதங்கள்...1500 கோவில்களில் குடமுழுக்கு... வரலாற்று சாதனை

x

34 மாதங்கள்...1500 கோவில்களில் குடமுழுக்கு... வரலாற்று சாதனை

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வரலாற்று சாதனை படைக்கும் விதமாக 34 மாதங்களில் ஆயிரத்து 500வது குடமுழுக்குத் திருவிழா கோவை கிணத்துக்கடவு வன்னி குமாரசாமி கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது...

முத்தூரில் பிரசித்தி பெற்ற வன்னி குமாரசாமி கோவிலில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது... தொடர்ந்து திரண்டிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது... ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்... வெறும் முப்பத்து நான்கே மாதங்களில் குடமுழுக்கு நடைபெறும் ஆயிரத்து 500வது கோவில் இதுவாகும்... 100 ஆண்டுகளுக்குப் பிறகு 5 கோவில்களிலும், 70 ஆண்டுகளுக்குப் பிறகு 6 கோவில்களிலும், 50 ஆண்டுகளுக்குப் பிறகு 15 கோவில்களிலும், 30 ஆண்டுகளுக்குப் பிறகு 15 கோவில்களிலும் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்