தனியார் பேருந்தை அடித்து நொறுக்கிய பாமக நிர்வாகி... மயிலாடுதுறையில் பரபரப்பு

x

மயிலாடுதுறையில், தனியார் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து, மயிலாடுதுறையில் நடந்த போராட்டத்தின் போது, தனியார் பேருந்து மீது மூன்று பேர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இது குறித்து புகாரின் பேரில், பாமகவினர் இருவர், பாஜக நிர்வாகி ஒருவர் என, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்