பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு படி பூஜை கொண்டாட்டத்தில் மதுரை மக்கள்

x

மதுரை அழகர்கோயில் மலை அடிவாரத்தில் உள்ள, பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயிலில் படிபூஜை மற்றும் சந்தனகாப்பு நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மதுரை கள்ளழகர் கோயிலின் ஆடி பிரமோற்சவ விழா கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஆடி பவுர்ணமியை முன்னிட்டு மலை அடிவாரத்தில் உள்ள, பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயிலில் படி பூஜை மற்றும் சந்தனகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மல்லிகை, ரோஜா உள்ளிட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கோயில் கதவுகள் திறக்கப்பட்டு, 18 படிகளிலும் தீபம் ஏற்றி படி பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து நிலைமணி கதவுகள் திறக்கப்பட்டு பல்வேறு அடுக்குகளை கொண்ட தீப ஆராதனை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, கோவிந்தா என்ற முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்