நாடாளுமன்ற தேர்தல்..உருவான புது சிக்கல்...

x

செங்கல்பட்டு உள்பட புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உட்பட்ட 7 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி நியமிப்பதில் சிக்கல் நிலவுகிறது.

தமிழகத்தில் அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஆயத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அவற்றை பிரித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின், காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. தற்போது, புதிய மாவட்டங்களுக்கு உள்பட்ட நாடாளுமன்ற தொகுதிகள் தொடர்பான பிரச்சினை தலைதூக்கி உள்ளது. ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு தேர்தல் அதிகாரி நியமிக்கப்படும் நிலையில், 7 தொகுதிகளில் தேர்தல் அதிகாரியாக யாரை நியமிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று முடிவு எடுக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்