"மகனை கண்டுபிடித்து தாருங்கள்.." - மனு அளித்த மூதாட்டி -சென்னை கமிஷனர் போட்ட உத்தரவு

x

மகனை தன்னோடு சேர்த்து வைக்க கோரி, சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்த மூதாட்டியை நேரில் சந்தித்த துணை ஆணையர், அவரது குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரை சந்தித்த அனுசுயா என்ற மூதாட்டி, தனது மகனை தன்னோடு சேர்த்து வைக்குமாறு மனு அளித்தார். இந்தநிலையில் சந்தீப் ராய் ரத்தோரின் உத்தரவின் பேரில் திருவல்லிக்கேணி துணை ஆணையர், மூதாட்டியின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர், மும்பையில் உள்ள மூதாட்டியின் மகனை கண்டுபிடித்து அவரோடு சேர்த்து வைப்பதாக உறுதி அளித்தார். தினசரி ரோந்து காவலர்கள் மூதாட்டியின் வீட்டிற்கு சென்று, குறைகளை கேட்டறிந்து உதவி செய்ய வேண்டுமெனவும், மூதாட்டியிடம் தினசரி தொலைபேசி வாயிலாக பேச வேண்டுமெனவும் உதவி ஆணையருக்கு உத்தரவிட்டார். மேலும் துணை ஆணையர் தனது செல்போன் எண்ணையும் மூதாட்டியிடம் வழங்கினார். இதனையடுத்து மூதாட்டி அனுசுயா, தனக்கு உதவி செய்ய நடவடிக்கை எடுத்த காவல் ஆணையருக்கு நன்றி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்