மதுரை - தேனி ரயில் சேவை; மேளதாள முழக்கத்துடன் வரவேற்ற அதிமுக, பாஜக

மதுரை - தேனி ரயில் சேவை; மேளதாள முழக்கத்துடன் வரவேற்ற அதிமுக, பாஜக
x


மதுரை தேனி வழித்தடத்தில் கூடுதலாக இரயில்களை இயக்க வேண்டுமென உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் கோரிக்கை விடுத்துள்ளார். மதுரை முதல் தேனி வரை செல்லும் பயணிகள் இரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்த நிலையில், உசிலம்பட்டி ரயில் நிலையத்தில் மதுரை - தேனி ரயிலுக்கு அதிமுக எம்.எல்.ஏ அய்யப்பன் தலைமையிலான அதிமுகவினரும், பாஜகவினரும் மேளதாளங்கள் முழங்க மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய எம்.எல்.ஏ அய்யப்பன், உசிலம்பட்டி பகுதி மக்களின் நலனுக்காக மதுரை - தேனி வழித்தடத்தில் கூடுதலாக பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் என ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்தார்.Next Story

மேலும் செய்திகள்