திருச்சியில் நடந்த அதே பிரச்சனை மதுரையில்.. விமானத்தில் சிக்கிய 106 பயணிகள் - பரபரப்பு

x

திருச்சியில் நடந்த அதே பிரச்சனை மதுரையில்.. விமானத்தில் சிக்கிய 106 பயணிகள் - பரபரப்பு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மதுரையில் இருந்து 13 மணி நேர தாமதத்திற்கு பின் துபாய்க்கு விமானம் புறப்பட்டு சென்றது. மதுரையில் இருந்து நேற்று பகல் 12.20 மணியளவில், ஸ்பைஸ் ஜெட் விமானம் துபாய்க்கு புறப்பட தயாராக இருந்தது. ஆனால் விமான சக்கரத்தில் பிரச்சினை இருப்பது தெரியவந்த நிலையில், பல மணி நேரம் போராடி, தொழில்நுட்ப வல்லுநர்கள் குறையை சரிசெய்தனர். இதனிடையே துபாய் செல்ல வேண்டிய 176 பயணிகளில் 70 பேர் பயணத்தை ரத்து செய்தனர். இதையடுத்து நள்ளிரவு 1.45 மணிக்கு 106 பயணிகளுடன் ஸ்பைஸ் ஜெட் விமானம் துபாய்க்கு புறப்பட்டு சென்றது.


Next Story

மேலும் செய்திகள்