காதலனை கரம் பிடிக்க தமிழாடு டூ லண்டன் தனி ஆளாக பறந்த காதலி! தமிழ் முறைப்படி கழுத்தில் ஏறிய தாலி
காதலனை கரம் பிடிக்க தமிழாடு டூ
லண்டன் தனி ஆளாக பறந்த காதலி!
தமிழ் முறைப்படி கழுத்தில் ஏறிய தாலி
சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த அமைச்சர் சேகர் பாபு
நாகையை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவர், தன் காதலனை கரம் பிடிக்க லண்டனுக்கு விமானத்தில் பறந்த சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா பஞ்சநதிக்குளம் பகுதியை சேர்ந்தவர் அருந்ததி..
இவர் லண்டனில் வேலை செய்து வரும் தஞ்சையை சேர்ந்த விஜய் என்பவரை நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இருவருக்கும் கடந்த 3ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், திருமணம் குறித்து இரு வீட்டாரும் பேசி வந்துள்ளனர்.
ஆனால்...லண்டனில் பணிக் காரணமாக விஜய்யால் தாயகம் திரும்புவதில், சிக்கல் ஏற்பட்ட நிலையில், காதலி அருந்ததி லண்டன் சென்று காதலனை கரம் பிடிக்க திட்டமிட்டு வந்துள்ளார்.
இதற்காக, சென்னையில் இருந்து தனியாக விமானம் மூலம் லண்டன் சென்று உறவினர் வீட்டில் தங்கி, லண்டனில் உள்ள முருகன் கோவிலில் இந்து முறைப்படி தமிழில் வேத மந்திரங்கள் முழங்க திருமணம் நடைபெற்றது...
இதில் லண்டனில் இருந்த உறவினர்கள் நேரடியாக கலந்துகொண்ட நிலையில், மணப்பெண்ணின் பெற்றோர் வேதாரண்யத்தில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் திருமணத்தை பார்த்து அகம் குளிர வாழ்த்தினர்.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக லண்டன் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, குடும்பத்துடன் வருகை தந்துள்ளார்.
இந்து முறைப்படி அரங்கேறிய திருமணத்தை பார்த்து, மணமக்களை வாழ்த்தியும் சென்றுள்ளார்.
