LED டிவியால் 8 நாளாக துடிதுடித்து அடங்கிய பிஞ்சு உயிர்.. பெற்றோர்களே இப்படி மட்டும் பண்ணிடாதீங்க
LED டிவியால் 8 நாளாக துடிதுடித்து அடங்கிய பிஞ்சு உயிர்.. பெற்றோர்களே இப்படி மட்டும் பண்ணிடாதீங்க
இரண்டரை வயது குழந்தை மீது எதிர்பாராத விதமாக டிவி விழுந்த நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பார்க்கலாம் இந்த தொகுப்பில்..
திண்டிவனம், கிடங்கல் பகுதி சுந்தரமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் கர்ணன். இவரின் இரண்டரை வயது மகன் தான் உதயகுமார்....
கடந்த 11ஆம் தேதி, வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்த குழந்தையின் மீது திடீரென டிவி விழுந்த நிலையில், பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது...
உடனடியாக குழந்தையை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து இருந்தனர். இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 8 நாட்களாக குழந்தை உதயக்குமார் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை பலியானது...
வீட்டில் இருந்த டிவியால் இரண்டரை வயது குழந்தையின் பறிபோன நிலையில், இனிவரும் காலங்களில் இது போன்ற அஜாக்கிரதைகளால் ஏற்படும் விபத்துகளையும், உயிரிழப்புகளையும் எப்படி தவிர்க்கலாம்.. என தனியார் எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர் முகமது இக்பால் சொல்வதை பார்க்கலாம்..
நம்மைச் சுற்றிலும் எலக்ட்ரானிக் மயமாகிவிட்ட காலத்தில், பெரியவர்களே எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை பாதுகாப்பாகவும், அளவாகவும் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
இவைகளுக்கு நடுவே, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் அவற்றின் ஆபத்துகளையும் துளியும் அறியாதவர்கள், பிஞ்சுக் குழந்தைகள். நவீன உலகில் எலக்ட்ரானிக்ஸின் தேவை அதிகரித்த நமக்கு, அதைவிட ஒரு உயிரின் மதிப்பை அறிந்து கவனமாக செயல்படுவது நம் ஒவ்வொருவருக்கும் கடமையாகும்.