மெட்ராஸ் ஐகோர்ட் மதுரை பெஞ்ச் போட்ட அதிரடி உத்தரவு
மெட்ராஸ் ஐகோர்ட் மதுரை பெஞ்ச் போட்ட அதிரடி உத்தரவு
கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரத்தில் உள்ள
ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழேசுவரர் கோயில் பராமரிப்பு பணிகளை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கரூரை சேர்ந்த ஆனிலையப்பர் அறக்கட்டளையின் அறங்காவலர் பெ.சுப்பிரமணியம் தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சோழேசுவரர் கோயிலுக்கு சொந்தமாக பல்வேறு இடங்களில் சுமார் 400 ஏக்கர் நிலங்கள் உள்ள நிலையில், கோயில் சொத்துக்களை மீட்கவும், புனரமைக்கவும் பல முறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுதாரர் குற்றம் சாட்டியிருந்தார். அப்போது அரசு தரப்பில் ஆயிரம் ஆண்டுகள் மிகப் பழமையான கோயில்களில் திருப்பணி செய்வதற்காக நடப்பு நிதியாண்டில் 100 கோடி ஒதுக்கிடப்பட்டிருப்பது சுட்டி காட்டப்பட்டது. மேலும், கோயில் நிலங்களை மீட்கவும்
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையின்படி கோயில் பராமரிப்பு பணிகளை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.