சந்தா தொகை பிடித்தத்தில் ஏற்பட்ட வாக்குவாதம்...செல்போனில் படம்பிடித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், தொமுசவினர் தாக்கியதாக கூறி, போக்குவரத்துக்கழக பொதுமேலாளரின் உதவியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தா வசூல் தொடர்பாக, தொ.மு.ச. பொதுச் செயலாளர் பச்சைமால் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், பொது மேலாளர் சிங்காரவேலு அலுவலகம் சென்று தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு சந்தா தொகை பிடித்தம் செய்ய வேண்டும் என்று வாக்குவாத‌த்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, செல்போனில் படம் பிடித்த பொதுமேலாளரின் உதவியாளர் சக்தி கணேஷ் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்