கதிகலங்க விட்ட குமரி கடல்.. 100 மீட்டர் தூரம் ராட்சத அலை - சுக்குநூறான ரூ.400 கோடி

x

கதிகலங்க விட்ட குமரி கடல்.. 100 மீட்டர் தூரம் ராட்சத அலை - சுக்குநூறான ரூ.400 கோடி

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் கடல் சீற்றத்தால் சேதமடைந்த முகத்துவாரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ படகு மூலம் ஆய்வு செய்தார்.

கடந்த 2022 ம் ஆண்டு ஏற்பட்ட கடல்சீற்றத்தின் போது மீன்பிடி துறைமுக முகத்துவார பகுதி கடலில் அடித்து செல்லப்பட்ட நிலையில், 253 கோடி ரூபாய் மதிப்பில் சுமார் 633 மீட்டர் நீளத்திற்கு கடல் அலை தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. 2 தினங்களுக்கு முன் ராட்சத அலை வீசி சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு தடுப்பு சுவர் அடித்து செல்லப்பட்டதோடு, முகத்துவாரத்தில் பல்வேறு இடங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. இதனால் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்ற பணிகள் வீணானதாக கூறப்படுகிறது. தொடர்ந்து முகத்துவார பகுதிகளில் படகில் சென்று ஆய்வு செய்த கிள்ளியூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார், அரசு முறையாக திட்டமிட்டு முகத்துவாரத்தை மறுசீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்