மணமக்களுக்கு கை குழந்தையை பரிசாக வழங்கிய ஜெயக்குமார் | Jayakumar | AIADMK | Kanchipuram

x

மணமக்களுக்கு கை குழந்தையை பரிசாக வழங்கிய ஜெயக்குமார் | Jayakumar | AIADMK | Kanchipuram

காஞ்சிபுரத்தில் மணமக்களை வாழ்த்த வந்த இடத்தில், பெயர் வைக்க கொடுத்த கை குழந்தையை, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மணமக்களுக்கு திருமண பரிசாக வழங்கியதால், சிரிப்பலை எழுந்தது. அதிமுகவின் காஞ்சிபுரம் ஒன்றிய செயலாளர் தும்பவனம் டி ஜீவானந்தம் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு அவர் மணமக்களை வாழ்த்தினார். அப்போது,

கைக்குழந்தைக்கு பெயர் வைக்க கூறிய நிலையில், அதை கையில் பெற்றுக் கொண்ட ஜெயக்குமார்,அந்த குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் வைத்தார்.

பின்னர் திடீரென கை குழந்தையை மணமக்களிடம் கொடுத்து, திருமண பரிசாக வைத்துக் கொள்ளுங்கள் என கூறியதால், சிரிப்பலை எழுந்தது.


Next Story

மேலும் செய்திகள்