போலி என்கவுன்டரில் சுட்டுக்கொல்ல திட்டம் - மகனை காப்பாற்ற சுற்றி வரும் பெற்றோர்

x

போலி என்கவுன்டரில் இருந்து தனது மகனை காப்பாற்ற வேண்டுமென, சிறையில் உள்ள குற்றவாளியின் தாய் தந்தையர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அரும்பாக்கம் ராதா கிருஷ்ணன் என்பவர் பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக, பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வழியில் அவரை சுட்டுக்கொல்ல போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறிய ராதாவின் பெற்றோர், அவரது உயிரை காப்பாற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்