உயர்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு

x

பொது பாடத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, தன்னாட்சி கல்லூரிகளே முடிவு செய்து கொள்ளலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.இது தொடர்பாக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்கள் நலன் கருதி பொது பாடத்திட்ட முறையை உயர்கல்வித்துறை கொண்டு வந்ததாகவும், இதற்கு 90 சதவிகித அரசு உயர் கல்வி நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடத்தி வரும் பாடத்திட்டம் முறை சிறப்பாக இருக்கின்றது என்றும், பொது பாடத்திட்ட முறையை அமல்படுத்தினால் தங்களது தன்னாட்சி உரிமை பறிபோகும் என்றும் தெரிவித்ததாக செயலாளர் குறிப்பிட்டுள்ளார் .இது தொடர்பாக அவர்களின் கருத்துக்களை பரிசீலனை செய்த அரசு, பொது பாடத்திட்டத்தை ஏற்பதா , அல்லது அவர்களுடைய பாடத்திட்டத்தையே தொடர்வதா என்பது குறித்து தன்னாட்சி கல்லூரி நிர்வாகங்களே முடிவு செய்து கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்