வருமானத்தை விட 1,120 மடங்கு.. விஜிலென்ஸிடம் சிக்கிய அரசு அதிகாரி - லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

x

வேலூர் நகரமைப்பு திட்ட அதிகாரி வருவாயை விட ஆயிரத்து120 மடங்கு வருமானம் குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவிலை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர், வேலூரில், நகரமைப்பு உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, சுப்பிரமணியம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், வெளிநாட்டில் படிக்கும் மகனுக்கு அதிகளவில் பணம் அனுப்பியதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை தொடங்கினர். இதில், 22 புள்ளி 27 லட்சம் சொத்து மதிப்பு கொண்ட சுப்பிரமணியம், ஒரு கோடியே 80 லட்சம் செலவிட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவரின் வருவாயை விட ஆயிரத்து 120 மடங்கு வருமானம் குவித்து இருப்பது உறுதியானது. இதையடுத்து, வருவாயை விட அதிக வருமானம் ஈட்டிய புகாரில் சுப்பிரமணியம் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர் ஓய்வு பெற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்