பேச மறுத்த காதலி... காதலன் செய்த கொடூர சம்பவம் -கதறும் உறவினர்கள்

x

பேச மறுத்த காதலி... காதலன் செய்த கொடூர சம்பவம் -கதறும் உறவினர்கள்

காரைக்குடி அருகே உள்ள மாத்தூர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த சினேகா என்ற கல்லூரி மாணவியும், இலுப்புக்குடியை சேர்ந்த

கண்ணன் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த மாதம் கண்ணன் வீட்டார், சினேகாவை பெண் கேட்டு அவரது

வீட்டிற்கு சென்றுள்ளனர். மூத்த பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்த பின்னரே, இளைய மகளான சினேகாவின் திருமணம்

குறித்து முடிவு செய்யப்படும் என பெண்ணின் வீட்டார் தெரிவித்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த கண்ணன், சினேகாவின்

தாத்தாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கண்ணனை சினேகா புறக்கணித்து வந்துள்ளார். இதில்

ஆத்திரமடைந்த கண்ணன், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சினேகாவை வழிமறித்து வாக்குவாதத்தில்

ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றவே, மறைத்து வைத்திருந்த இரும்புக் கம்பியை எடுத்து, சினேகாவின் தலையில்

பலமாக தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதில், படுகாயமடைந்த சினேகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான கண்ணனை தேடி வருகின்றனர்.Next Story

மேலும் செய்திகள்