"சின்ன கடைங்கனு இளக்காரமா? எங்க பெரிய கடைகள் மேல கை வைங்க பாப்போம்" - திணறிய அதிகாரிகள்

x

மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி சார்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நேற்றைய தினம் பன்னீர் செல்வம் பூங்கா சாலையில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் முக்கிய சாலைகளில் 300க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கடை உரிமையாளர்கள் வாக்குவாதம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர்... இந்நிலையில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் அதிகாரிகள் ஆர்கேவி சாலையில் சாலையோரம் போக்குவரத்திற்கு இடையூறாக போடப்பட்டிருந்த தள்ளுவண்டி கடைகள், பேனர்கள் ஆகியவற்றை அகற்றினர்... அப்போது பெரிய கடைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் சிறிய கடைகள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதாக கடை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்... ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்... இதனால் அங்கு பரபரப்பு நிலவியது...


Next Story

மேலும் செய்திகள்