களைகட்டும் தீபாவளி விற்பனை! கடல் போல் நிரம்பிய கடைவீதிகள்

x

களைகட்டும் தீபாவளி விற்பனை! கடல் போல் நிரம்பிய கடைவீதிகள் | Diwali ஷாப்பிங்

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தீபாவளி விற்பனை களை கட்டியுள்ளது.

திருச்சி

திருச்சியில் என்.எஸ்.பி. ரோடு, சிங்காரத்தோப்பு, மலைக்கோட்டை, பெரியகடை வீதி ஆகிய இடங்களில் உள்ள ஜவுளிக் கடைகளில் புத்தாடை வாங்குவதற்காக பொதுமக்கள் குவிந்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் காந்திஜி சாலை, அண்ணா சாலை, கீழராஜவீதி. உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புத்தாடை வாங்குவதற்காக, வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை

மதுரையில் விளக்குத்தூண், மாசி வீதி பகுதியில் தீபாவளி பஜார் விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது. புத்தாடைகள் மட்டுமல்லாது வீட்டுக்கு உபயோக பொருட்களை வாங்கவும் கூட்டம் அலைமோதியது. 500-க்கும் மேற்பட்ட போலீசார் 350 சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு

ஈரோட்டில் ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, பன்னீர் செல்வம் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் புத்தாடை வாங்குவதற்காக பொதுமக்கள் குவிந்தனர். பொதுமக்கள் அதிகம் கூடும் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்