திடீர் ட்விஸ்ட்.. அவசரப்பட்ட புதிய புயல் சின்னம்.. ரெஸ்ட் விடாமல் மீண்டும் பயமுறுத்தும் இயற்கை
திடீர் ட்விஸ்ட்.. அவசரப்பட்ட புதிய புயல் சின்னம்.. ரெஸ்ட் விடாமல் மீண்டும் பயமுறுத்தும் இயற்கை
வங்கக் கடலில், ஒரு நாள் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் அக்டோபர் 22-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானில ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால், மத்திய அந்தமான் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சியின் காரணமாக ஒரு நாள் முன்கூட்டியே நாளை 21-ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. இது தொடர்ந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 23-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story