சென்னையை அதிரவைத்த 6 பேர் தட்டி தூக்கிய போலீஸ்
மாதவரம் பகுதியில், தீபக் என்பவர் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை விற்பனை செய்து வந்துள்ளார். அவருக்கு உடந்தையாக அவரது மனைவி டாலியும் இருந்துள்ளார். இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 2.29 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் அளித்த வாக்குமூலத்தின் மூலம் வியாசர்பாடியை சேர்ந்த முத்துக்குமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1.37 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போன்று, அயனாவரம் பகுதியில் மெத்தபெட்டமைன் வைத்திருந்த பாலசண்முகம், அருண் லக்ஷ்மணன், ரஞ்சித் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 5 கிராம் மெத்தப்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story