சென்னை வெள்ள துயரத்திலும் ஆசிரியர் செய்த அசிங்கம்.. அழுது கொண்டே குலைநடுங்கி ஓடி வந்த சிறுமி

x

சென்னை வெள்ள துயரத்திலும் ஆசிரியர் செய்த அசிங்கம்.. அழுது கொண்டே குலைநடுங்கி ஓடி வந்த சிறுமி

சென்னையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இசை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சாலிகிராமம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் மழைநீர் புகுந்ததால், தரை தளத்தில் வசிக்கும் குடும்பத்தினர் மாடியில் காலியாக இருக்கும் அறைக்கு சென்றனர். அறையை சுத்தம் செய்துக் கொண்டிருந்த போது, அருகில் வசிக்கும் இசை ஆசிரியரான சுரேந்தர் சிறுமியை அழைத்துச் சென்று இசை கருவிகளை காண்பித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் இசை ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக கண் கலங்கியபடி பெற்றோரிடம் சிறுமி குமுறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், இசை ஆசிரியர் சுரேந்தரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்