சென்னை சாலைகளில் நிற்கும் கார்கள் ஏலம்..? அதிர்ச்சியில் ஓனர்கள் பின் பறந்த உத்தரவு
சென்னை சாலைகளில் நிற்கும் கார்கள் ஏலம்..? அதிர்ச்சியில் ஓனர்கள் பின் பறந்த உத்தரவு
சென்னை மாநகர சாலைகளில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை பறிமுதல் செய்யும் முன்பு முறையான நோட்டீஸ் அளித்து பறிமுதல் செய்யவேண்டும் என அதிகாரிகளுக்கு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் 15 நாட்களுக்கு மேலாக ஒரே இடத்தில் கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைத்திருந்தால், அவை உடனடியாக பறிமுதல் செய்து ஏலவிடப்படும் என ஏற்கனவே சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. இந்நிலையில், வாகனங்களை பறிமுதல் செய்யும் முன்பு முறையாக நோட்டீஸ் அளிப்பதில்லை என்றும் அபராதம் செலுத்தி வாகனத்தை மீட்டால் வாகனத்தை சேதப்படுத்தி ஒப்படைப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி இருந்தன. இதை அடுத்து ஒரே இடத்தில் 15 நாட்களுக்கும் மேலாக நிற்கும் வாகனங்களை பறிமுதல் செய்யும் முன்பு முறையான நோட்டீஸ் அளித்து பறிமுதல் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.