"எதே...இந்த காருக்கு ஹெல்மெட் போடனுமா?" அதிர்ந்த ஓனர்
"எதே...இந்த காருக்கு ஹெல்மெட் போடனுமா?" அதிர்ந்த ஓனர்
கன்னியாகுமரியில் காரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டதால் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
ரணியல் அருகே காரங்காடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் ஐயப்பனின் செல்போனுக்கு, கன்னியாகுமரி காவல்நிலையத்தில் இருந்து அண்மையில் குறுஞ்செய்தி வந்துள்ளது. அபராத ரசீதில் காரின் பதிவெண் உள்ள நிலையில், ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்ததால் ஐயப்பன் அதிர்ச்சி அடைந்தார். இந்த சூழலில், போலீசார் குறிப்பிட்டுள்ள நேரத்தில் கார் வீட்டில் நின்றதற்கான சிசிடிவி காட்சி மற்றும் அபராத ரசீதையும், சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து ஐயப்பன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
Next Story