திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச பெண் - போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்

x

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சட்டவிரோதமாக குடியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளகினர் பகுதியில் வங்கதேசத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சட்டவிரோதமாக குடியிருந்து வருவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, அங்கு சென்று ஆய்வு செய்ததில் லீனா பேகம் என்ற 20 வயது இளம்பெண் எந்த ஒரு ஆவணமுமின்றி தங்கியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பெண்ணை கைது செய்த போலீசார் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
Next Story

மேலும் செய்திகள்