சென்னையின் பிரதான சாலையில் மது விருந்து.. ஆட்டம் போட்ட இளைஞர்கள்.. அதிர்ச்சி வீடியோ

x

சென்னையின் பிரதான சாலையில் மது விருந்து.. ஆட்டம் போட்ட இளைஞர்கள்.. அதிர்ச்சி வீடியோ

சென்னையில் சாலையில் மது விருந்துடன் ஆயுத பூஜை கொண்டாடிய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனாம்பேட்டையில் உள்ள திருவள்ளுவர் தெருவில், கடந்த 6-ஆம் தேதி, வாகனங்களுடன் ஆயுதபூஜை கொண்டாடிய சில இளைஞர்கள் மது விருந்து வைத்துள்ளனர்.

அதுதொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் சிறுவர்களும் மதுபாட்டில்களுடன் இருக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த விடியோவை வைத்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்