அமைச்சரிடம் வாக்குவாத‌த்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் - வெளியேற முயன்றதால் கூட்டத்தில் சலசலப்பு

x

அமைச்சரிடம் வாக்குவாத‌த்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் - வெளியேற முயன்றதால் கூட்டத்தில் சலசலப்பு

மதுரையில் நடைபெற்ற எம்எல்ஏக்களின் 10 கோரிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், அமைச்சரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டு வெளியேற முயன்றதால் சலசலப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் எம்எல்ஏக்கள் வழங்கிய 10 கோரிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், எம்எல்ஏக்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, முதியோர் உதவித் தொகை திட்டம் உள்ளிட்டவை குறித்து செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினர்.

மேலும், வரலாற்றில் முதல்முறையாக இப்படி ஒரு கூட்டம் நடத்தப்பட்டதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேற முயன்றதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர், அவர்களை அமைச்சர் மூர்த்தி சமாதானம் செய்து அமர வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்