யார் இந்த பாம்பாட்டி சித்தர்? - பேரவையில் சுவாரஸ்யம்

பாம்பாட்டி சித்தர் யார் என்று அவை முன்னவர் துரைமுருகன் எழுப்பிய கேள்விக்கு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில் சுவாரஸ்யமாக பதில் அளித்தார்.
x
பாம்பாட்டி சித்தர் யார் என்று அவை முன்னவர் துரைமுருகன் எழுப்பிய கேள்விக்கு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில் சுவாரஸ்யமாக பதில் அளித்தார். கேள்வி நேரத்தின்போது, அதிமுக உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள பாம்பாட்டி சித்தர் திருக்கோயிலில் திருப்பணிகள் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, பாம்பாட்டி சித்தர் கோயில் திருப்பணிகளுக்கு 6 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். அடுத்த ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெறவுள்ள நிலையில், முன்கூட்டியே பணிகள் நடைபெற்று வருவதாகவும், அங்கு ரம்மியமான சூழலை உருவாக்கித் தருவோம் என்றும் அமைச்சர் உறுதியளித்தார். மருதமலை முருகன் பிரசித்தி பெற்றது பாம்பாட்டி சித்தரால்தான் என்றும், அமைச்சர் சொன்னதை செய்தால் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பக்தர்களுக்கும் சித்தர் அருள் புரிவார் என்றும் கூறி அம்மன் கே.அர்ஜுனன் நன்றி தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் துரைமுருகன், யார் இந்த பாம்பாட்டி சித்தர் என்று கேள்வியை முன்வைத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, கிபி 12 ஆம் நூற்றாண்டில் மருதமலை முருகன் திருக்கோயிலில் தவமிருந்தவர் பாம்பாட்டி சித்தர் என்று விளக்கம் அளித்தார். சித்து வேலை மூலம் சர்பமாக மாறி, சுரங்க வழியாக முருனை வழிப்பட்டவர் சித்தர் என்பது வரலாறு என்றும், தென்காசியில் அவர் ஜீவ சமாதி அடைந்தார் என்றும் விளக்கம் அளித்தார்.பின்னர் பேசிய சபாநாயகர் அப்பாவு , சித்தர் வரலாறு தொடங்கி அகில உலக வரலாற்றையெல்லாம் தெரிந்து வைத்திருப்பதாக அமைச்சர் சேகர்பாபுவை பாராட்டினார். பாம்பாட்டி சித்தர் குறித்து பேரவையில் பேசப்பட்டது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்