இவ்வளவு துப்பாக்கிகளா..!? எச்சரித்த எஸ்.பி... ஒப்படைத்த மக்கள்

கள்ளத் துப்பாக்கிகளை ஒழிக்க போலீசார் எடுத்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் ஒத்துழைப்பு கொடுத்ததன் பேரில் ஏராளமான கள்ளத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்..
x
கள்ளத் துப்பாக்கிகளை ஒழிக்க போலீசார் எடுத்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் ஒத்துழைப்பு கொடுத்ததன் பேரில் ஏராளமான கள்ளத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்... அடர்ந்த காடுகள் கொண்ட வனப்பகுதிகளை சுற்றியுள்ள மாவட்டமாக இருக்கிறது கிருஷ்ணகிரி. இந்த வனப்பகுதியில் யானைகள், கரடிகள், சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்டவை சுற்றி வரும். இவைகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அப்பகுதி மக்கள் நாட்டுத் துப்பாக்கிகளை வாங்கி கள்ளத்தனமாக பயன்படுத்தி வருவது வழக்கம். கடந்த 2017ல் சேஷாத்ரி என்பவர் கள்ளத்துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் முதல் கள்ளத்துப்பாக்கிகளை ஒழிக்கும் பணியில் இறங்கிய போலீசார் அவ்வப்போது அதனை பறிமுதல் செய்து வந்தனர். இருந்த போதிலும் கள்ளத்துப்பாக்கிகளின் புழக்கம் அதிகமாக இருக்கவே அதனை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் களமிறங்கினார் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாக்கூர்.. கள்ளத்துப்பாக்கிகளை வைத்திருப்போர் வரும் 10ஆம் தேதிக்குள் தாமாக முன்வந்து ஒப்படைக்குமாறு வலியுறுத்தினார். பஞ்சாயத்து தலைவர் மூலமாகவோ, அருகே உள்ள காவல் நிலையங்களிலோ தாங்கள் வைத்திருக்கும் கள்ளத் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என்றார். அப்படி கள்ளத்துப்பாக்கிகளை ஒப்படைப்போர் மீது எந்தவித வழக்கும் போடப்படாது என்றும், தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் உத்தரவாதம் தரப்பட்டது. இதனை பஞ்சாயத்து தலைவர்கள் மூலமாக தண்டோரா போட்டு பொதுமக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. இதன்பேரில் கள்ளத்துப்பாக்கிகளை வைத்திருந்த ஏராளமான மக்கள், தாமாக முன்வந்து தங்கள் வசமிருந்த கள்ளத்துப்பாக்கிகளை ஒப்படைத்தனர்...

Next Story

மேலும் செய்திகள்