ஹோட்டலில் மாணவியிடம் சில்மிஷம்.. 4 கி.மீ. துரத்தி பிடித்த மாணவர்கள்.. சினிமாவை மிஞ்சிய சேஸிங்

கன்னியாகுமரி அருகே கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை, சினிமா பாணியில் விரட்டிச் சென்று மாணவர்கள் மடக்கி பிடித்த பரபரப்பு வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
x
கன்னியாகுமரி அருகே கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை, சினிமா பாணியில் விரட்டிச் சென்று மாணவர்கள் மடக்கி பிடித்த பரபரப்பு வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. நாகர்கோவிலில் உள்ள உணவகத்திற்கு கல்லூரி மாணவி தனது நண்பர்களுடன் வந்துள்ளார். அங்குள்ள கைகழுவும் இடத்தில் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதை தட்டிக்கேட்ட மாணவனை கீழே தள்ளிவிட்டு, காரில் ஏறி அந்த நபர் தப்ப முயன்றார். சினிமா பாணியில் காரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டி சென்று மடக்கிய மாணவர்கள், அந்த நபரை பிடித்தனர். மாணவர்களிடம் விவரத்தை கேட்டறிந்து கொதிப்படைந்த பொதுமக்கள், அந்த நபரின் கார் கண்ணாடியை உடைத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், காரில் வந்த நபரை ரணியல் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மாணவியிடம் தவறாக நடக்க முயன்றவரை, சினிமா பாணியில் சேஸிங் செய்து பிடித்த மாணவர்களை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்