தலைக்கேறிய போதையால் கத்தியை காட்டி ரகளை - அலப்பறை இளைஞரை அடித்து துவைத்த கிராம மக்கள்
மதுரை டி.கல்லுப்பட்டியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேடமணிந்து நேர்த்திக் கடன் செலுத்திய திருவிழாவில், ஆயுதத்துடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை டி.கல்லுப்பட்டியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேடமணிந்து நேர்த்திக் கடன் செலுத்திய திருவிழாவில், ஆயுதத்துடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த T.கல்லுப்பட்டியில் புதுமாரியம்மன் கோயில் திருவிழா களைகட்டியது. ஆயிரக் கணக்கானோர் பங்கேற்ற திருவிழாவில், ஏராளமானோர் பல்வேறு வேடமணிந்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். T.கல்லுப்பட்டி வழியாக நேர்த்திக்கடனை செலுத்திய பக்தர்கள் மீது மது மற்றும் கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள், ரகளையில் ஈடுபட்டனர். வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், ரகளையில் ஈடுபட்ட ஒரு இளைஞர் அடித்து உதைக்கப்பட்டார். 48 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்ற திருவிழாவில் நடந்த இந்த சண்டையால், கலவரம் போல் பக்தர்கள் சிதறி ஓடினர். அப்போது, பக்தர் ஒருவரிடம் சிறிய அரிவாளை காட்டி மிரட்டிய இளைஞர், ஆயுதத்துடன் கூட்டத்தில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து போலீசார் வந்ததும், இளைஞர் வேகமாக தப்பி ஓடினார். மீண்டும் அதே இடத்துக்கு வந்த அந்த இளைஞரை பிடித்த போலீசார், காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
Next Story