பசுவை கடித்த வெறிநாய்..சாலையில் செல்வோரை விரட்டி விரட்டி முட்டிய வெறிபிடித்த பசு

அறந்தாங்கி அருகே வெறிபிடித்து திரிந்த பசுவை தீயணைப்புத்துறையினர் பிடித்து அப்புறப்படுத்தினர்.
x
அறந்தாங்கி அருகே வெறிபிடித்து திரிந்த பசுவை தீயணைப்புத்துறையினர் பிடித்து அப்புறப்படுத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் பெருங்காடு கிராமத்தில், வெறிநாயின் கடிக்குள்ளான பசுமாடு, சாலைகளில் போவோர் வருவோரை முட்டியும் , கடித்தும் வந்துள்ளது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள், மாட்டை பிடிக்க முயற்சி செய்தும் முடியாமல் போகவே, இதுகுறித்து கோட்டாட்சியருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கோட்டாட்சியர் உத்தரவு பேரில், பெருங்காட்டிற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் இளைஞர்களின் உதவியோடு மாட்டை பிடித்து அப்புறப்படுத்தினர். இதனால் கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்